Thursday, December 31, 2009

End of the year நிக்கறோம். திரும்பி பாக்கரப்ப பல விஷயம் முக்கியமா படுத்து. கூட்டி கழிச்சி பாத்தா... கஷ்டம் தா அதிகமா இருக்கு. 2010 ரொம்ப ஆவலா எதிர்பாத்துகிட்டு இருக்கேன்.

இந்த வருஷ முக்கியமானது TCS ல இருந்து IBM கு வந்தது தான்.

Wednesday, December 30, 2009

'பூ'- மாரி

பாக்கணும் பாக்கணும்னு இறுத்த படம், 'பூ'.

மாரி யா வர பொண்ணு, கலக்கு கலக்கு னு perform பண்ணி இறுக்கு.

பாக்காதவங்க மொதல்ல போய் திருட்டு VCD ல யாவது பாருங்க. தி. ஜா செங்கமா கும், இந்த மாரிக்கும் connection இருக்கும் தோணுது.

Don't miss it.

Tuesday, December 15, 2009

உயிர்த்தேன்- தி.ஜா

தி.ஜா அவர்களின் உயிர்த்தேன் வாசித்துக் கொண்டு இருக்கின்றேன். ஏற்கனவே வாசித்து தான். மிகவும் பிடித்தது தான். ஆனாலும் இப்பொழுது வாசிக்கும் பொழுது... புதிய தேனை சுரக்க வைக்கிறது.

யாரோ ஒரு எழுத்தாளர் 97 முறை இதை வாசித்தாராம். நான் படித்து கொஞ்ச வருஷம் ஆனதால், 97 முறை படிக்க என்ன இருக்துன்னு பாக்க மறுபடியும் இந்த புக்கை எடுத்தேன்.

"எல்லாம் தயாராகி விட்டது" இது தான் முதல் வரி. ஒரு பெரும் புயலை மறைத்து வைத்து இருக்கும் மேகம் எவ்வளவு அமைதியாய் இருக்குமோ அப்படித்தான் இந்த முதல் வரியும் இருக்கு.

ஒரு படிக்காத பெண், கிராமத்து பெண், அன்பை மட்டுமே இரத்தமாக கொண்ட ஒரு பெண்ணின் இதயத்தை, இப்படி படைக்க தி.ஜா வால் எப்படி முடிஞ்சது...?? அப்பா..! அப்பா..!! பாதி தான் படிச்சி இருக்கேன், எத்தனை எத்தனை நுணுக்கமான பதிவுகள்.

இதுல செங்கம்மா தான் heroin. ஒரு ஆம்பளைய ஒரு பெண்ணால இவ்வளவு தூரம் புரிஞ்சிக்க முடயுமானு தெரியல ?!! நா பழகினதுல, ஒண்ணு ரெண்டு பொண்ணூங்க இந்த செங்கம்மை போல இருகாங்க. முழுசா இல்லநாளும் முக்கால்வாசி இருக்காங்க. என்ன.... இவங்களால அந்த அளவுக்கு வெளிபடைய இறுக்க முடியல, இல்ல வெளிபடைய காட்டிக்க தெரியல. அதனால என்ன.... ஊர் பூராவும் தம்பட்டமா அடிக்க முடியும்?? எனக்கே இப்பதா என் கூட இருகிறவங்களை அடையாளம் கண்டுக்க mudiyedu.

நா படிச்சா நாவல்லாம் நுணுக்கமா இருக்கும். நமக்கு தெரியாத விஷயம் தான் அதிகம் இருக்கும். இதுல நாம ஆனுபவிச்ச ஆனா மனசுக்குள்ள பதியாத சந்தோசங்களை என்ன அழகா புரிய வைகிராரு??

ஐயா தி.ஜா எப்படி உங்களால 1960 லையே இப்படி தென்றல எழத முடிஞ்சது. நாங்களாம் தென்றல் வந்தா எந்த திசைல இருந்து வருது? எத்தனை கி.மீ ல வருதுன்னு தான் யோசிக்க தெரிஞ்சி வச்சி இருக்கோம். உங்க உயிர்த்தேன் ல தான் ஆராச்சி பண்ணாம அனுபவிக்க கத்துகிட்டேன்.

உயிர்த்தேன் ல இப்ப பல அர்த்தங்கள் இருப்பதா தோணுது. இந்த புக்கை நீங்க படிச்சாலும் கண்டிப்பா உயிர்த்தேன் உங்களுக்குள்ளும் சுரக்கும்.

(Spelling mistake திருத்தர அளவுக்கு பொறுமை இல்ல... நீங்களே மேல உள்ளதை கூட்டி கழிச்சி புரிஞ்சிகங்க.)

Thursday, December 10, 2009

ஜெயகாந்தன் சிறுகதைகள்

ஜெயகாந்தன் சிறுகதைகள் பாகம் 2, night தான் முடிச்சேன். எத்தனை வருஷத்துக்கு முன்னாடி எழுதன கதைங்க... இப்ப படிச்சாலும் புதுசாவே இருக்கு. ஞான பிடம் ஏன் J.K sirகு கொடுத்தங்கனு thyriyaathavanga இதை படிக்கணும்.

59 கதை படிச்சேன்; மொத்தம் 820 பக்கம்.. எல்லாமும் மாணிக்கம்.

இறந்த காலங்கள்
புகை நடுவினில்
கிழக்கும் மேற்கும்
ரிஷிகுமரன்
குருபீடம்

wow wow wow... 1960 layee, ஒரு கலக்கு கலக்கிடிங்க sir.

கார்த்திகை தீபம் மிஸ்ஸிங்

இந்த வருஷம் கார்த்திகை தீபம் (டிசம்பர் ௧) பக்க முடியல, ராஜ் டிவி ல பாக்க முடிஞ்சது. வர சண்டே மல சுத்தலாம்னு இருக்கேன்.

Tuesday, October 20, 2009

பெங்களூர் வாழ்க்கை

வந்து மூணு மாசம் ஆகின்றது... இன்னமும் பிடிபடவில்லை. Bus கண்டக்டர்கள் மிக கண்ணியதுடந நடந்து, பெங்களூர் மானத்தை உயர்த்துகிறார்கள். சாலைகளையும் கவனமாக பரமரிக்க்ரிறார்கள்.

சென்னைகு எப்பொழது விடிவோ?

சமிபத்திய வாசிப்பு: சோழர்கள் - 1.

Monday, June 22, 2009

தற்பொழுது, Autobiography of Yogi(தமிழ்) வாசித்து கொண்டு இருக்கின்றேன்.... 750 பக்கங்கள். மிக சுவாரசியமான பக்கங்களுடன் புரண்டு கொண்டு இருக்கின்றது... விரைவில் என் புத்தக பார்வை உங்கள் முன்.
சமிபத்தில் வாசித்த புத்தகம் எஸ். ராமகிர்ஷ்ணனின், 'பதேர் பஞ்சலி' சினிமாவை புரிதலுடன் பார்க்க இந்த புத்தகம் மிக சிறந்த வழிகாட்டி. ஒவ்வொரு படத்திலும் நாம் பார்த்த காட்சிகளை விட, தவறிய காட்சிகள் தான் அதிகம். இந்த புத்தகம் ரசிப்பு நுணுக்கங்களை 30% உயர்த்தி விடுகின்றது. டோன்ட் மிஸ் திஸ் புக்.

Wednesday, May 27, 2009

My first day blog.

மிக விரைவில் தவிர்க்க முடியாத இம்சை அரசனாக, உங்கள் favorite லிஸ்டில் இடம் பிடிப்பேன்.

- லௌ ஆல்... கார்தீக்