Tuesday, December 15, 2009

உயிர்த்தேன்- தி.ஜா

தி.ஜா அவர்களின் உயிர்த்தேன் வாசித்துக் கொண்டு இருக்கின்றேன். ஏற்கனவே வாசித்து தான். மிகவும் பிடித்தது தான். ஆனாலும் இப்பொழுது வாசிக்கும் பொழுது... புதிய தேனை சுரக்க வைக்கிறது.

யாரோ ஒரு எழுத்தாளர் 97 முறை இதை வாசித்தாராம். நான் படித்து கொஞ்ச வருஷம் ஆனதால், 97 முறை படிக்க என்ன இருக்துன்னு பாக்க மறுபடியும் இந்த புக்கை எடுத்தேன்.

"எல்லாம் தயாராகி விட்டது" இது தான் முதல் வரி. ஒரு பெரும் புயலை மறைத்து வைத்து இருக்கும் மேகம் எவ்வளவு அமைதியாய் இருக்குமோ அப்படித்தான் இந்த முதல் வரியும் இருக்கு.

ஒரு படிக்காத பெண், கிராமத்து பெண், அன்பை மட்டுமே இரத்தமாக கொண்ட ஒரு பெண்ணின் இதயத்தை, இப்படி படைக்க தி.ஜா வால் எப்படி முடிஞ்சது...?? அப்பா..! அப்பா..!! பாதி தான் படிச்சி இருக்கேன், எத்தனை எத்தனை நுணுக்கமான பதிவுகள்.

இதுல செங்கம்மா தான் heroin. ஒரு ஆம்பளைய ஒரு பெண்ணால இவ்வளவு தூரம் புரிஞ்சிக்க முடயுமானு தெரியல ?!! நா பழகினதுல, ஒண்ணு ரெண்டு பொண்ணூங்க இந்த செங்கம்மை போல இருகாங்க. முழுசா இல்லநாளும் முக்கால்வாசி இருக்காங்க. என்ன.... இவங்களால அந்த அளவுக்கு வெளிபடைய இறுக்க முடியல, இல்ல வெளிபடைய காட்டிக்க தெரியல. அதனால என்ன.... ஊர் பூராவும் தம்பட்டமா அடிக்க முடியும்?? எனக்கே இப்பதா என் கூட இருகிறவங்களை அடையாளம் கண்டுக்க mudiyedu.

நா படிச்சா நாவல்லாம் நுணுக்கமா இருக்கும். நமக்கு தெரியாத விஷயம் தான் அதிகம் இருக்கும். இதுல நாம ஆனுபவிச்ச ஆனா மனசுக்குள்ள பதியாத சந்தோசங்களை என்ன அழகா புரிய வைகிராரு??

ஐயா தி.ஜா எப்படி உங்களால 1960 லையே இப்படி தென்றல எழத முடிஞ்சது. நாங்களாம் தென்றல் வந்தா எந்த திசைல இருந்து வருது? எத்தனை கி.மீ ல வருதுன்னு தான் யோசிக்க தெரிஞ்சி வச்சி இருக்கோம். உங்க உயிர்த்தேன் ல தான் ஆராச்சி பண்ணாம அனுபவிக்க கத்துகிட்டேன்.

உயிர்த்தேன் ல இப்ப பல அர்த்தங்கள் இருப்பதா தோணுது. இந்த புக்கை நீங்க படிச்சாலும் கண்டிப்பா உயிர்த்தேன் உங்களுக்குள்ளும் சுரக்கும்.

(Spelling mistake திருத்தர அளவுக்கு பொறுமை இல்ல... நீங்களே மேல உள்ளதை கூட்டி கழிச்சி புரிஞ்சிகங்க.)

1 comment:

  1. It is good.. .just wrote what u thought.. thats what we want... and I liked this... "இந்த புக்கை நீங்க படிச்சாலும் கண்டிப்பா உயிர்த்தேன் உங்களுக்குள்ளும் சுரக்கும்.
    "

    ReplyDelete