Thursday, January 28, 2010

"ஆய பயன் "


அப்ba..!!! ஒரு வழியாக Freud ஐ முடித்து விட்டேன். யார் எல்லாம் இந்த புக் ஐ படிக்கலாம்... பெண்களின் psychology தெரிந்து கொள்ள அசை படுbavar, இந்த புக் ஐ மிஸ் பண்ண வேண்டாம்.

மனித கரு உருவானது முதல் படிப் படியாக எப்படி மனம் வளர்கிறது என்பதை விளக்குவதே Freud ன் முதல் வேலை.

நனவு(conscious), நனவடங்கு(Sub-conscious), நனவிலி(unconscious) என்பன எங்கு, எப்படி, எபொழுது தோன்றுகிறது, எது மிக வலிமையானது...என சகலமானதும் இந்த புக்கில் உள்ளது. இட்(id), ஈகோ, சூப்பர் ஈகோ எங்கு தோன்றுகின்றது, கனவின் வேலை என்ன, கனவு எப்படி தோன்றுகிறது, கனவுக்கு அர்த்தங்கள், என மனித மனதை புட்டு புட்டு வைக்கின்றார்.

மரத்தில் இருந்து ஆப்பிள் கிழே விழுவது எவ்வளவு இயற்கையோ, அப்படி தான் மனித மனமும் பால்(செக்ஸ்) சார்ந்து வளர்கின்றது. எல்லா movement கும் பால் சார்ந்த இயற்கை தான் மனிதனை வழி நடத்துக்கின்றது. சமுக சூழலுக்கு மனது(ஈகோ) கட்டுப்பட வேண்டி வரும் பொழுது தான் மனக் கோளாறுகள் உள்ளாகின்றதாம். So , ஊர் உலகத்துக்குகாக பயந்து பயந்து வாழ்த்த, psycho வ தான் அலையனுமாம்.

மொத்ததுல, இந்த bookகாla "ஆய பயன் " என்னநா... நம்ம சுத்தி இருக்கற மனுஷ பயளுங்கள eassya adjust பண்ணிக்கிட்டு, deepa புரிஞ்சிக்கிட்டு, (ஆடு மாடு மாதிரி தேமேன்னு வாழாம) சந்தூஷமா வாழ முடயுமாம். இப்ப எனக்கு M.A Psychology corress ல படிக்கலாமா தோநிகிட்டு இருக்கு. இல்ல ஒரு psycho டாக்டர் பார்த்து இன்னும் கொஞ்சம் Freud ஐ improve பண்ணிக்கணும்னு இருக்கு.

துணையா யாரவது படிச்சிட்டு வாங்கபா, இன்னும் deep ஆ discuss பண்ணலாம். சொல்ல வேண்டியதுலாம் இன்னும் நிறைய baakki இருக்கேனு ...மனசு புலம்புகின்றது.

Wednesday, January 27, 2010

பாதி கிணறு

Sigmund Freud யை பாதி கிணறு தாண்டி விட்டேன்.. Wow Wow Wow...!! ஏன் இந்த புத்தகம் உலகை புரட்டி போட்டது எப்பது புரிகின்றது.
நான் படிக்க பயந்தது போல் எதுவும் என்னை மிரட்ட வில்லை.

அக்கு வேறு, ஆணி வேறாக இந்த புத்தகம் மனிதனை பிரித்து போட்டு விடுகின்றது..

மனித மனம் எப்படி வளர்கின்றது, எப்படி பாதிக்கப் படுகின்றது, எது மனம் வளர பக்க துணை நிற்கிறது, மனதின் வளர் நிலை, குழந்தை மனம், வாலிபமனம், ஆண் மனம், பெண் மனம், சமுதாய மனம், உள் மனம், வெளி மனம், எப்படி காதல், பல பேர் இறுக்க ஒருத்தர் மீது மட்டும் ஏன் காதல், நீ படிக்கும் பாடம் , பிடிக்கும் பிடி, செய்யும் தொழில், ஏன் பிடிகிறது, ஏன் காரம் பிடிக்கவில்லை, பால் வேறுபாடு, ஆண் ஏன் காதலிக்கிறான், பெண் ஏன் காதலிக்கப் பட விரும்புகிறாள், ஏன் கனவு, ஏன் மனசிதைவு, ஏன் mackup ,நட்பு எப்படி காதலாக மாறுகின்றது, பெண் ஏன் pant shirt விரும்புகிறாள், ஏன் homo, பலப் பல "ஏன்" களுக்கு இந்த புத்தகம் மிக theylivaaga விளக்கம் தருகிறது. பல விஷயங்களை சவுக்கால் அடிப்பது போல் "சுரீர்" என விழுகின்றது. அதனால் தானோ மிக அதிகமான எதிரிப்பை இந்த புத்தகம் சந்தித்து?!

Genetic Science மரபு சந்தததி பிழைகளை நிக்குவது போல, இந்த psycho therapy மனப் பிழைகளை வேர் அறுக்கின்றது.. Freud சொல்வதை பார்த்தல் ஒவ்வொரு செல்லாக புகுந்து புகுந்து பார்த்தல், கடவுளை தொட்டு விடலாம் போல இருக்கிறது.

இதில் நாம் பெருமை பட என்ன இர்ருகின்றது எனில், நமது தாத்தன் புட்டன்கலான வள்ளுவன், புத்தன், ரிஷிகள் இவர்களும் இந்த மனப் பகுப்பு முறையை theyrinthu வைத்து இருகின்றகள், but அவர்களுக்கு அறிவியல் அப்பொழுது அறிமுகம் ஆகா வில்லை...

Freud காக என் தலை தொப்பியை தூக்குகின்றேன்.

( மீதி... முழுவதும் படித்த பின்)

Monday, January 11, 2010

சென்னை புத்தக திருவிழா. 33 ம் ஆண்டு.

கண் கொள்ள காட்சி. நான் காத்திருந்து வாங்கிய புத்தகங்கள்.
1. Sigmund Freud ன், Psychoanalysis science உளப்பகுபாய்வு அறிவியல்.(தமிழ்)
2 எழுதும் வாழ்கையும் -சுஜாதா
3 . ............... காதலன் - சுஜாதா(கண்ணை மூடிக்கொண்டு, சுஜாதா என்பதால் வாங்கிய புத்தகம், டைட்டில் நினைவிற்கு வர மறுக்கின்றது)
4 . வெல்லைத்தீ- அறிவுமதி
5 . அம்மா வந்தாள். தி.ஜா
6 அடி . தி.ஜா
7 . சக்தி தரிசனம் - தி. ஜா
8 . பிராணயாமம் -
9 UGC for akka
10. power grid for babuji.

Freud ம், சுஜாதாவையும் துடங்கி உள்ளேன். Freud யை படிக்க பயமாக உள்ளது. ஆனாலும் ஆர்வம் அடங்க வில்லை. என் மூளை அர்ரித்துகொண்டே இருக்கின்றது... எப்பொழுது முடிப்பேன்என்று.

படித்த பின், பிடித்தவை உங்கள் முன்.

Tuesday, January 5, 2010

சமையல் அறை சண்டை

15:20 05/01/2010
சமையல் அறை சண்டை
------------------
அறை எண் 305 ல்
முகம் பார்த்திராத
நண்பர்களின் அம்மாக்கள்
கையளவு ப்பிளஸ்டிக் டப்பாவுகுள்
சமையல் அறையில்
சண்டை போட்டுக்கொள்கின்றார்கள்,
'யார் செய்து கொடுத்த
ஊறுகாய் அதிக சுவை' என்று.

‍_ லெள ஆல் கார்'தீ'க், செய்யாறு.