Monday, July 19, 2010

ச‌ந்திர‌னை தொட்ட‌வ‌ன்.

மூண்று ஆண்டுகள் தொடர் முயற்சியின் வெற்றியாக, காவனூர் VBO/VBT telescope center, ஜவ்வாது மலையில் உள்ள IIA இல் பார்த்தேன். மிக பிரம்மாண்டமானது. இரு கண்கலால் அதன் வடிவை முழுவதுமாக பார்க்கமுடியவில்லை. வாமன அவதாரம் தான். 2.34 மீட்டர் தடிமன் அளவு உள்ள லென்ஸ் கொண்டு, பால்வீதி முழுவதுமாய் அளக்க கூடிய திறன் கொண்டதாம். ஆசியா கண்டத்திலேயெ மிகப் பெரியது இது மட்டும் தானாம். இதனை பராமரிக்க, நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபா செலவு பிடிக்கின்றதாம்.
உள்ளே ஒரு தனி பெட்ரோல் பங்க்கே வைத்திருக்கிறார்கள். வண்டிகளுக்காக அல்ல, கரண்ட் இல்லாத சமயத்தை சமாலிக்க மட்டும். நான் எவ்வளவு சொன்னாளும் அதன் பிரம்மாண்டத்தை முழுவதுமாய் சொல்ல முடிய வில்லை.

நிலாவை ஒரு telescope இல் பார்க்க‌ வைத்தார்க‌ள், இண்டு, இடுக்கு, மேடு, ப‌ள்ள‌ம், பாட்டி சுட்ட‌ வ‌டையின் எண்ணை க‌றை கூட‌ பார்தேன்.

எல்லோரும் பார்க்க‌ வேண்டிய‌ ஒன்று. சந்தேகம் இல்லாமல் இது ஒரு மாகானூபாவம்.
நான் பார்த்த நாள்: 17 July 2010,
எல்லொரும் பார்க்க ச‌னிகிழ‌மை 2pm to 5pm ம‌ட்டும்.

Saturday, July 10, 2010

ஆசை.

நான் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் தீவிர வாசகன். 60,70வதுகளில் வந்த அவரது படைப்புகளை, அப்போதய பதிப்புகளை மொத்தமும் ஒருவர் அக்கரையுடன் bind பண்ணி பாதுகாத்து பொக்கிஷமாய் வைத்திருந்தார். அவரிடம் இருந்து இரவல் வாங்கி மொத்தமும் படித்தேன். கிட்டத்தட்ட சிறுசும்(சிறுகதை), பெருசுமாய்(நாவல்) 47 புத்தககங்களை வாங்கி படித்தேன். படி தேன் குடித்தேன். அன்று முதல் அவருடன் இலக்கிய விவாதத்துடன் ஒரு வேளை உணவருந்த வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. படித்து முடித்ததும், ஒரு வருடம் கழித்து சேதாரம் இல்லாமல் 47 புத்தகங்களையும் பத்திரமாய் திருப்பிக்கொடுத்தேன். இப்பொழுது அவரது 90% படைப்புகளை வாசித்து முடிதிருப்பேன்.

அவருக்கு ஞானபீட விருது கிடைத்தபொழுது, வாழ்த்து சொல்ல விகடனிடம் அவரது முகவரியை வாங்கி, ஒரு கடிதமும் போட்டேன். அப்பொழுதும் எனது ஆசையை அவருக்கு தெரியப்படுத்தி இருந்தேன். தமிழக முதல்வருடன் உணவருந்தவே அவருக்கு நேரம் இல்லாமல் இருக்கலாம்!?!? அப்படி இருக்கும் பொழுது என்னுடைய ஆசை, பேராசை என்றே எனக்கு படுகின்றது.

எழுத்தாள‌ர் சுஜாதாவுட‌னும் இப்ப‌டி ஒரு ச‌ந்திப்பிற்காக‌ காத்திருந்தேன். காலம் அந்த‌ வாய்பை எனக்கு தார‌வே இல்லை. :(