Saturday, July 10, 2010

ஆசை.

நான் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் தீவிர வாசகன். 60,70வதுகளில் வந்த அவரது படைப்புகளை, அப்போதய பதிப்புகளை மொத்தமும் ஒருவர் அக்கரையுடன் bind பண்ணி பாதுகாத்து பொக்கிஷமாய் வைத்திருந்தார். அவரிடம் இருந்து இரவல் வாங்கி மொத்தமும் படித்தேன். கிட்டத்தட்ட சிறுசும்(சிறுகதை), பெருசுமாய்(நாவல்) 47 புத்தககங்களை வாங்கி படித்தேன். படி தேன் குடித்தேன். அன்று முதல் அவருடன் இலக்கிய விவாதத்துடன் ஒரு வேளை உணவருந்த வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. படித்து முடித்ததும், ஒரு வருடம் கழித்து சேதாரம் இல்லாமல் 47 புத்தகங்களையும் பத்திரமாய் திருப்பிக்கொடுத்தேன். இப்பொழுது அவரது 90% படைப்புகளை வாசித்து முடிதிருப்பேன்.

அவருக்கு ஞானபீட விருது கிடைத்தபொழுது, வாழ்த்து சொல்ல விகடனிடம் அவரது முகவரியை வாங்கி, ஒரு கடிதமும் போட்டேன். அப்பொழுதும் எனது ஆசையை அவருக்கு தெரியப்படுத்தி இருந்தேன். தமிழக முதல்வருடன் உணவருந்தவே அவருக்கு நேரம் இல்லாமல் இருக்கலாம்!?!? அப்படி இருக்கும் பொழுது என்னுடைய ஆசை, பேராசை என்றே எனக்கு படுகின்றது.

எழுத்தாள‌ர் சுஜாதாவுட‌னும் இப்ப‌டி ஒரு ச‌ந்திப்பிற்காக‌ காத்திருந்தேன். காலம் அந்த‌ வாய்பை எனக்கு தார‌வே இல்லை. :(

No comments:

Post a Comment