Monday, July 19, 2010

ச‌ந்திர‌னை தொட்ட‌வ‌ன்.

மூண்று ஆண்டுகள் தொடர் முயற்சியின் வெற்றியாக, காவனூர் VBO/VBT telescope center, ஜவ்வாது மலையில் உள்ள IIA இல் பார்த்தேன். மிக பிரம்மாண்டமானது. இரு கண்கலால் அதன் வடிவை முழுவதுமாக பார்க்கமுடியவில்லை. வாமன அவதாரம் தான். 2.34 மீட்டர் தடிமன் அளவு உள்ள லென்ஸ் கொண்டு, பால்வீதி முழுவதுமாய் அளக்க கூடிய திறன் கொண்டதாம். ஆசியா கண்டத்திலேயெ மிகப் பெரியது இது மட்டும் தானாம். இதனை பராமரிக்க, நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபா செலவு பிடிக்கின்றதாம்.
உள்ளே ஒரு தனி பெட்ரோல் பங்க்கே வைத்திருக்கிறார்கள். வண்டிகளுக்காக அல்ல, கரண்ட் இல்லாத சமயத்தை சமாலிக்க மட்டும். நான் எவ்வளவு சொன்னாளும் அதன் பிரம்மாண்டத்தை முழுவதுமாய் சொல்ல முடிய வில்லை.

நிலாவை ஒரு telescope இல் பார்க்க‌ வைத்தார்க‌ள், இண்டு, இடுக்கு, மேடு, ப‌ள்ள‌ம், பாட்டி சுட்ட‌ வ‌டையின் எண்ணை க‌றை கூட‌ பார்தேன்.

எல்லோரும் பார்க்க‌ வேண்டிய‌ ஒன்று. சந்தேகம் இல்லாமல் இது ஒரு மாகானூபாவம்.
நான் பார்த்த நாள்: 17 July 2010,
எல்லொரும் பார்க்க ச‌னிகிழ‌மை 2pm to 5pm ம‌ட்டும்.

1 comment:

  1. பக்கத்துல இருக்கும்போது நமக்கு அருமை தெரியாதாம்.. அது போலத்தான் காவனூர் எங்க ஊர்லருந்து 30 km இதுவரைக்கும் போனது இல்ல..
    அடுத்த தடவ கண்டிப்பா போகணும்.. தேங்க்ஸ் கார்த்தி..

    ReplyDelete