Tuesday, March 30, 2010

ம‌ஹாத்மா

முடிக்க வேண்டும் என்று துவக்கப் பட்ட எல்லா வேலைகலும் முடிவுக் கோட்டை தொடுவது இல்லை. எத்தனையொ புத்தகங்களை பத்து பக்கங்களுக்கு மேல் தாண்ட முடியாமல் திண்டாடிகொண்டுதான் இருக்கின்றேன். அப்படி பல தடைகளை தாண்டி மகாத்மா காந்தியின் 'சத்திய சோதனை'(தமிழ்) முடித்தேன்.

ஒரு புத்தகம் தனக்கு தேவையான வாசகனை தானே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனவா? எல்லா புத்தகங்களும் கையில கிடைத்தால் மட்டும் படிக்கப் பட்டு விடுவது இல்லை. புத்தகத்துக்கும் வாசகனுக்கும் ஒரு நதி மூலம் ரிஷி மூலமே எப்பொழுதும் இருந்து கொண்டு வ‌ருகின்ற‌து.

எத்தனை மலிவாய் கிடத்தாளும், படிக்க வேண்டும் என்ற விதை, அவா, தாகம் எங்கோ ஒரு புள்ளியில் தான் ஊண்றப் படுகின்றது. பூபாலின்(வி/க‌ட‌லை ப‌ருவ‌த்து தோழன்) அண்ணா தான் முதன் புள்ளி. இரண்டாவது, சுந்தர்.சி விவேக் நடித்த ஒரு படம். படத்தில் இருவரும் தண்டனைக்காக மதுரை காந்தி மியுசியம் வருவார்கள். ஒரு போட்டிக்காக சத்திய சோதனை புக்கை மாளவிகா பெயரை பயன் படுத்தி அதிகம் விற்பார்கள். அந்த புத்தகத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதில் சொல்பவர்களில் ஒருவர் மாளவிகா உடன் டிண்ணர் சாப்பிட வாய்ப்பு. போட்டிக்காக புத்தகத்தை வாசிக்கும் ஒரு ரசிகர், சத்திய சோதனையால் கவரப்பட்டு, திருந்தி மக்களுக்கு சேவை செய்ய கிளம்பி விடுவார். இந்த காட்சியினால் இந்த புக்ககை படிக்க ஆசை பட்டேன். இந்த காட்சியினால் தூண்டப் பட்டு யாரேனும் இந்த புத்தகத்தை வாசிக்க தொடங்கி இருப்பார்கலா? தெரிய‌வில்லை?! இது படத்தின் டைரக்டருக்கு கிடைத்த வெற்றியே!!

மொத்தம் 605 பக்கங்கள். வாசிக்க வாசிக்க மஹாத்மாவை பக்கத்தில் இருந்து பார்த்தார் போல் இருக்கின்ற‌து. எந்த‌ ஊட‌க‌மும் கொடுக்க‌ முடியாத‌ ஒரு நெருக்க‌த்தை புத்த‌க‌ம் ம‌ட்டுமே கொடுக்கின்ற‌து. ச‌த்திய‌ சோத‌னை‍‍ இந்த‌ வார்த்தையின் பொருள் ப‌டிப்ப‌தற்க்கு முன் ஒன்றாக‌வும், ப.பின் வேறாக‌வும் உண‌ர‌ முடிகின்ற‌து. தாம் எடுத்துக் கொண்ட‌ ச‌த்திய‌த்திற்கு எத்த‌க‌ய‌ சோத‌னைக‌ள் வ‌ந்த‌ன‌, அதை எந்த‌ எந்த‌ நேர‌த்தில் எப்படி காப்பாற‌ப்ப‌ட்ட‌து என்ப‌த‌ன் அவ‌தனிப்பே இந்த‌ புத்த‌க‌ம்.இதில் அவரே நம்முடன் பேசுவது போல் புத்தகம் துடங்குகின்றது. நம் வீட்டு தாத்தா அவர் வாழ்ந்த வாழ்கையை அவரே கதை கதையாய் நம்மிடம் சொல்வது போல் காந்தி நம்மிடம் சொல்கின்றார்.

அவ‌ருக்கு நினைவு தெரிந்த‌ நாள் முத‌ல் கொண்டு இது விவ‌ரிக்க‌ப் ப‌டுகின்ற‌து. சாதார‌ன பைய்யனாய் எப்ப‌டி ஒருவ‌ன் வ‌ள‌ர்கின்றான், என்ன என்ன‌ கார‌ண‌ங்க‌ள் ஒருவ‌னின் வாழ்கையில் குறுக்கிடுகின்ற‌ன‌, எப்ப‌டி அவ‌ன் அதை ப‌ய‌ன் ப‌டுத்திக்கொள்கின்றான் என‌ புத்த‌க‌ம் விரிகின்ற‌ ப‌க்க‌ங்கள் ஒவ்வொன்ரும் மிக‌ எதார்த‌மான‌வை.

ந‌ம‌து அன்றாட‌ வாழ்வில் ம‌ஹாத்மா, ப‌ல‌ வ‌ழிக‌ளில் ந‌ம்மை குறுக்கிடுகின்றார். க‌ர‌ண்சி நோட்டில், காந்தி க‌ண‌க்கில், திரைப்ப‌ட‌ நீதி ம‌ன்ற‌‍, போலீஸ் ஸ்டேஷ‌ன் காட்சிக‌ளில், வ‌ழுக்கை த‌லையுட‌ன், வ‌ட்ட‌ க‌ண்ணாடி அனிந்த‌ தாத்தா உருவம், நாம் க‌ண் மூடி யோசித்தாலும் ந‌ம்மால் காண முடியும்.

எப்ப‌டி இவ‌ர் ம‌ட்டும் இந்த‌ இட‌த்திற்கு வ‌ர‌ முடிந்த‌து, 40 கோடி ம‌க்க‌ள் வாழ்ந்த‌ கால‌த்தில் ஒரு த‌லைவ‌ன் எப்ப‌டி உருவானான். எல்லா கால‌த்திற்குமான‌ ஒரு பாட‌ம் தான் இந்த‌ சத்திய சோதனை.

அவ‌ர், தேச‌ப் பிதாவாக‌ ம‌ட்டுமே ந‌ம‌க்கு அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து ஒரு பிழையே. பால்ய‌த்தில் அவ‌ர் கொண்ட‌ லீலைக‌ள், பாரிஸ்ட‌ர் ப‌ட்ட‌ப் ப‌டிப்பு வாழ்கை, இங்கிலாந்து வாழ்கை, அம்மாவிற்கு செய்து கொடுத்த‌ ச‌த்திய‌த்தின் ப‌க்க‌ விளைவுக‌ள், தென் ஆப்ரிக்கா ப‌ய‌ண‌ம், அங்கு அவ‌ர் செய்த‌ வ‌க்கில் தொழில், க‌ப்ப‌ல் ப‌ய‌ண‌க் குறிப்புக‌ள், மூண்றாம் வ‌குப்பு இர‌யில் பயண‌ ச‌ங்க‌ட‌ங்க‌ள், சைவ‌ உண‌வு போறாட்ட‌ம், ஆட்டுப் பால் ப‌ழ‌க்க‌ம், எப்ப‌டி பிர‌ச்ச‌னைக‌ளை அனுகுவ‌து, எப்ப‌டி த‌லைவ‌னுக்கான‌ குணங்க‌ளை பெருவ‌து, என எல்லா ப‌க்க‌ங்க‌ளிலும் ஒரு M.B.A மாண‌வ‌னுக்கு தேவையான‌ பாட‌ங்க‌ளும்,அனுப‌வ‌ங்க‌ளும் மிக‌ப் பெரிய‌ வ‌ர‌ம்.

இந்த‌ புத்த‌க‌த்தை ச‌ரியாக‌ marketing செய்ய‌ த‌வ‌றி விட்டார்க‌ள் ந‌ம‌து பெருசுக‌ள். எத்த‌னை க‌ல்லூரி, ப‌ள்ளி ஆசிரிய‌ர்க‌ள் இந்த‌ புத்த‌க‌தை முழுவ‌துமாய் ப‌டித்து இருக்கின்றார்கள்?? ஒரு ஆசிரிய‌ர் ப‌டித்தால், அவ‌ரால் ஒரு நூறு பேரை ப‌டிக்க‌‌ வைக்க‌ முடியும். இங்கு பிர‌ச்ச‌னையெ ஆசிரியரை ப‌டிக்க‌ வைப்ப‌து தான்...

இந்த‌ புத்த‌க‌ம், எந்த‌ ஒரு விருவிருப்பான‌ துப்ப‌ரியும் க‌தைக்கும் ச‌லைத்த‌து அல்ல.

நேர‌ம் இல்லை என்று ப‌ந்தா ப‌ன்னும் ப‌ல‌ப் பேருக்கு இந்த‌ புத்த‌க‌ம் ஒரு ஆயுலுக்கு தேவையான‌ நேர‌த்தை காலத்துகும் வாங்கிக் கொடுக்கும்.

ஜ‌ன‌ க‌ன‌ ம‌ன‌ பாடுவ‌து ம‌ட்டும் தேச‌ப் பற்று ஆகிவிடாது. ம‌க்க‌ளுக்காக‌ பாடுப‌ட்ட‌ ஒரு த‌லைவ‌னை, முத‌ல்வ‌னை,ஒரு அசாதாரண மனிதரை ப‌டித்து தெரிந்து வைத்துக்கொண்டு, ம‌ற்ற‌வ‌ர்களை ப‌டிக்க‌த் தூண்டுவ‌தும் தேச‌ப் ப‌க்தியே.

நொப‌ல் விஞ்சானி ஐன்ஸ்டின் சொன்னாராம்," 50 ஆண்டுக‌ளுக்கு பிற‌கு இப்ப‌டி ஒரு ம‌னித‌ர் ந‌ம்மிட‌யே வாழ்ந்தார் என்றால், இந்த‌ உல‌க‌ம் ந‌ம்பாது" என்று. உண்மை தான், என்னால் உண‌ர‌ முடிகின்ற‌து.

பார‌த் மாத‌க்கு ஜெய்....ம‌ஹாத்மா காந்திக்கு ஜெய்!!

Monday, March 29, 2010

பட்டய கிளப்புற பட்டம்..

சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறாமல் நமக்குள் எத்தனை நாள் புதைந்து இருந்தாலும், ஒரு நாள் நிறைவேற வாய்ப்பு கிடக்கும் பொழுது பெறுகின்ற மகிழ்சிக்கு ஈடு இணை ஏது? வயசு வித்யாசம் ஏது..? அப்படியான சி.சி.ஆ ஒன்று நேற்று வயசுக்கு வந்தது.

கோலி ஆடுதல், சுற்றும் பம்பரத்தை கையில் ஏற்றி விரும்பிய பெண்ணின் கையில் விட்டு கிச்சு-கிச்சு மூட்டுதல், மாஞ்ச நூலுடன் பட்டம் விடுதல், விரல் மடித்து விசில் அடித்தல்.. இப்படி சி.சி.ஆசைகளில் சின்ன வயசு முதற்கொண்டே தோற்றவனாகவே இருந்தது வந்து இருகின்றேன்.

நேற்று அக்கா பையனுடன் பட்டம் விட்டேன்... என்ன ஒரு ஆச்சரியம். சின்ன வயசில் ஆட்டம் காட்டிய பட்டம் நேற்று கைவசம் சிக்கியது... மேலே மேலே மேலே என்று பட்டம் பறந்த பொழுது, நானும் கூடவே பறந்தேன். Aerodynamics இல் பட்டம் வாங்கியது போல இருந்தது.. மாஞ்ச தடவிய நூலில் பட்டம் மேலே போக போக நானும் அக்கா பையனும் கூத்தாடினோம். காற்று திசை மாறி கீழ் நோக்கி பாய்ந்த பொழுது திக் திக் எகிறியது.. சின்ன வயசில் சிக்காத நுணுக்கம் நேற்று சிக்கியது. பட்டம் கிழே பாயும் பொழுது சர சர என நூலை இழுத்து, சொடுக்கி சொடுக்கி பட்டதை அந்தரத்தில் நிறுத்துவது தனி கலை. தலையில் கொம்பு(unicorn) முலைதார் போல் இருந்தது. சிறு வயதில் பட்டதை விண்ணில் நிறுத்துவதற்கும், பெரியவர்கள் ஆனா பின்னர் satellite யை வானில் நிறுத்துவதற்கும் அதிகம் வித்தியாசம் இருக்காது போல...

என் ஜோட்டு பசங்க எல்லோரும் அப்பவே மிக சரியாய் பட்டத்தை வானில் நிறுத்தி விண்ணை தாண்டி இருகிறார்கள். சில பேர் பட்டறிவில் மிக தேர்ந்தவராக வளர்கின்றார்கள். இதில் நான் கொஞ்சம் மக்கு ரகம்.

மரம் ஏற, கில்லி ஆட, கோழி புடிக்க, மாங்காய் திருட, பால்(ball) திருட, இதில் எல்லாம் ஜஸ்ட் பாஸ் ரகம் தான்.

பெண்கள் ஏன் பட்டம் விடுவது இல்லை? இதையும் indoor game ல் சேர்த்தால் பெண்களும் பட்டம் விட கூடும்.. மூன்று மணிநேரம் உலகை மறந்து வானில் கண்கள் பதிய பட்டத்தை மிதக்க வைப்பது ஒரு சுகானுபவமே....

சந்திரமுகி ரஜினி போல, நானும் பட்டய கிளப்புற பட்டத்தை பறக்கவிட்டேன்.
பட்டம் விடாமல், பட்டம்(degree) வாங்கி என்ன பயன்...??

Wednesday, March 10, 2010

கொக்கு பற பற! மைனா பற பற!!

எத்தனை முறை படித்திருப்போம்? எத்தனை முறை வாய் வார்த்தையை சொல்லி இருப்போம்? ஒரு முறையேனும் பறந்து இருப்போமா? ஒற்றை வார்த்தையில் பறக்க வேண்டுமா வாருங்கள் வேடந்தாங்கல்.

போன வாரம், பறவையோடு பறவையாய் ஒரு முழு நாள் மொத்தமும் பறந்து திரிந்து வந்தேன். பாட புத்தகத்தில் எல்லாம் சென்னை இல் இருபதாகவே சொல்லி வருகின்றார்கள். மதுராந்தகதுகும் செங்கல்பட்டுக்கும் நடுவில் உள்ள 72 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு ஏரி தான் வேடந்தாங்கல். இனிப்பு என்பதர்ற்கு அர்த்தத்தை dictionary இல் தேடும் பொழுது, திருப்தி லட்டு கிடைப்பதை போல வேடந்தாங்கல் எனக்கும் அறிமுகம் ஆனது. Cousin Bro தான் இந்த ஊர் சுத்துற விஷயத்துக்கு partner.

நாம் ஏன் பறவைகளை விட்டு பிரிந்து இருக்கின்றோம்? எப்பொழுது பறவைகளை விட்டு பிரிந்தோம்? நமது பக்கத்து விட்டு மனிதர்களை பங்காளியாய் நினைக்கின்ற உறவை, பறவைகளிடமும், விலான்குகளிடமும் நாம் உணர்வது இல்லையே ஏன்? காகம், புற, மைனா என நாம் தெரிந்து வைத்து இருக்கும் பறவைகள் மிக சொற்பமே.

வேடந்தாங்கலில் பறவைகள் வருஷ வருஷம் அட்ரஸ் மாறாமல் தொடர்ந்து வருகின்றன.. எத்தனை எத்தனை பறவைகள்!! நான் பார்த்த பொழுது கிட்ட தட்ட 50 ஆயிரம் பறவைகள் இருந்து இருக்கும். சைபிரிய, ஆஸ்திரேலிய, இங்கிலாந்து, வட துருவம் என கண்டம் விட்டு கண்டம் தாண்டி வந்த பறவைகளை பார்த்தேன். ஒரு மரத்தில் ஒரு இன பறவைகள் என கூடம் கூடமாக military dicipline வாழ்க்கை வாழ்கின்றன.

ஜோடி பறவைகளாய் தங்கள் இனத்தை பெருக்கி கொள்வதற்காவே வேடந்தாங்கல் வருகின்றன. Vedanthaaingal பற்றி நமக்கும் புரியாத ஏதோ ஒரு விஷேசத்தை அந்த பறவைகள் மட்டும் தேரிந்து வைத்து இருகின்றன. எனக்கு புரியவே இல்ல, எப்படி இந்த இடத்தை பறவைகள் கண்டுபிடித்தன என்று? எப்படி தான் மனிதன் எனக்கு எல்லாம் தெரியும் என்று அலைகின்றானோ?

தாய் பறவை அங்கும் இங்கும் பறந்து, சுள்ளி பொறுக்கி சொந்தமாய் கூடு காட்டுகின்றது. ஆண் பறவை இரை தேடி 100km வரை பறந்து திரிகின்றது. Watch tower ஒன்று வைத்து இருக்கின்றார்கள். Telescope ஒன்றின் மூலம் தூரத்தில் இருக்கும் பறவை கூடு, கூட்டில் இருக்கும் பறவை, பறவையின் முட்டை, குஞ்சு பொரிந்த குட்டி சேய் பறவை என, மிக பக்கத்தில் காட்டுகிறார்கள். அந்த பறவை குட்டுகுள் நானும் ஒரு பறவை குஞ்சாய் உணர்ந்தேன்.

அவை பறக்கும் அழகு, கூடு கட்டும் அழகு, முட்டைகளுக்கு வெயில் படாமல் இருக்க இரண்டு இறக்கை களையும் விரித்து பகிரதன் போல மௌனமாய் நின்று அடை காக்கும் அழகு, run way இல் இறங்கும் விமானம் போல மாலை கூடு திரும்பும் பறவைகள், அங்கிங் என காணும் காட்சி மொத்தமும் பறக்கும் ஓவியங்களே!!! Jan to April நான்கு மாதங்களே வந்து, குட்டி ஈன்று, குட்டி பறவைகளுக்கு வழி காட்டி, மீண்டும் தன் வசிப்பிடதுக்கே திரும்புகின்றன. குட்டி பறவைகள் தன் பருவ காலத்தில் வழி தப்பாமல் மீண்டும் தான் பிறந்த எட்டத்துகே வருகின்றன. இரவு படுத்த பின்னும் பறவைகள் கண்ணுக்குள் பறந்து கொண்டே இருந்தன. அவதார் படத்தில் ஹீரோ பறவை மேல் உட்கார்ந்து பறப்பது போலவே இருந்தது.

எனது அண்ணாவின் வர்ப்புருதலால் ஒரு வெளிநாட்டினரிடம் பேச்சு கொடுத்தேன்...

" ஹலோ, Weclome டு இந்திய. எங்கள் நாட்டிற்கு வந்ததற்கு நன்றி. எந்த தேசத்தை சார்ந்தவர் நீங்கள்?"
"hey nice to meet you, we are from England"
" oh nice, hope this is your fist visit to India and Vedathaaingal? how is your trip?"
"NO! NO! this is my second visit to Vedanthaaingal and India"

வெட்கத்தால் என் தலையை மண்ணுக்கும் புதைத்துக்கொண்டு இருப்பேன் நான் மட்டும் நெருப்பு கோழியாய் இருந்திருந்தால்... ஏன் என்றால் என் ஊர் செய்யாரில் இருந்து வேடந்த்தாங்கள் 40km தூரம் கூட இருக்காது.. இத்தனை வருஷத்தில் முதல் தடவையாய் இப்பொழுது தான் வருகின்றேன்.

கோயில் குளம் என்று சலிக்காமல் சுற்றும் நாம், ஒரு முறையேனும் நம் குழதைகளோடு இங்கு வந்து பார்க்க வைக்க வேண்டாமா ? குழந்தைகளுக்கு நீச்சல் சொல்லி கொடுத்தால் மட்டும் போதுமா, பறக்க சொல்லி கொடுக்க வேண்டாமா?