Monday, March 29, 2010

பட்டய கிளப்புற பட்டம்..

சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறாமல் நமக்குள் எத்தனை நாள் புதைந்து இருந்தாலும், ஒரு நாள் நிறைவேற வாய்ப்பு கிடக்கும் பொழுது பெறுகின்ற மகிழ்சிக்கு ஈடு இணை ஏது? வயசு வித்யாசம் ஏது..? அப்படியான சி.சி.ஆ ஒன்று நேற்று வயசுக்கு வந்தது.

கோலி ஆடுதல், சுற்றும் பம்பரத்தை கையில் ஏற்றி விரும்பிய பெண்ணின் கையில் விட்டு கிச்சு-கிச்சு மூட்டுதல், மாஞ்ச நூலுடன் பட்டம் விடுதல், விரல் மடித்து விசில் அடித்தல்.. இப்படி சி.சி.ஆசைகளில் சின்ன வயசு முதற்கொண்டே தோற்றவனாகவே இருந்தது வந்து இருகின்றேன்.

நேற்று அக்கா பையனுடன் பட்டம் விட்டேன்... என்ன ஒரு ஆச்சரியம். சின்ன வயசில் ஆட்டம் காட்டிய பட்டம் நேற்று கைவசம் சிக்கியது... மேலே மேலே மேலே என்று பட்டம் பறந்த பொழுது, நானும் கூடவே பறந்தேன். Aerodynamics இல் பட்டம் வாங்கியது போல இருந்தது.. மாஞ்ச தடவிய நூலில் பட்டம் மேலே போக போக நானும் அக்கா பையனும் கூத்தாடினோம். காற்று திசை மாறி கீழ் நோக்கி பாய்ந்த பொழுது திக் திக் எகிறியது.. சின்ன வயசில் சிக்காத நுணுக்கம் நேற்று சிக்கியது. பட்டம் கிழே பாயும் பொழுது சர சர என நூலை இழுத்து, சொடுக்கி சொடுக்கி பட்டதை அந்தரத்தில் நிறுத்துவது தனி கலை. தலையில் கொம்பு(unicorn) முலைதார் போல் இருந்தது. சிறு வயதில் பட்டதை விண்ணில் நிறுத்துவதற்கும், பெரியவர்கள் ஆனா பின்னர் satellite யை வானில் நிறுத்துவதற்கும் அதிகம் வித்தியாசம் இருக்காது போல...

என் ஜோட்டு பசங்க எல்லோரும் அப்பவே மிக சரியாய் பட்டத்தை வானில் நிறுத்தி விண்ணை தாண்டி இருகிறார்கள். சில பேர் பட்டறிவில் மிக தேர்ந்தவராக வளர்கின்றார்கள். இதில் நான் கொஞ்சம் மக்கு ரகம்.

மரம் ஏற, கில்லி ஆட, கோழி புடிக்க, மாங்காய் திருட, பால்(ball) திருட, இதில் எல்லாம் ஜஸ்ட் பாஸ் ரகம் தான்.

பெண்கள் ஏன் பட்டம் விடுவது இல்லை? இதையும் indoor game ல் சேர்த்தால் பெண்களும் பட்டம் விட கூடும்.. மூன்று மணிநேரம் உலகை மறந்து வானில் கண்கள் பதிய பட்டத்தை மிதக்க வைப்பது ஒரு சுகானுபவமே....

சந்திரமுகி ரஜினி போல, நானும் பட்டய கிளப்புற பட்டத்தை பறக்கவிட்டேன்.
பட்டம் விடாமல், பட்டம்(degree) வாங்கி என்ன பயன்...??

1 comment:

  1. ஹா ஹா !!!! என்ன ஒரு timing !!! இன்று காலை தான் நானும், குமாரும் பழைய சங்கதிகளை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தோம். குமார் தனுடைய captaincy அனுபவத்தை என்னமாய் ரசிச்சு சொன்னான். அதுபோல நீயும் உன் பட்டமும்! பலே பலே!!! இது ஒரு நல்ல பதிவு. I like the word "ஜோட்டு". :o) :o) வாழ்த்துக்கள்!!!

    -பூபாலன்

    ReplyDelete