Sunday, June 13, 2010

பெங்களூர் தமிழ் சங்கம்.

நீண்ட நாளாக போகவேண்டும் என காத்திருந்து போய் பார்த்தேன்.மிக அழகான சூழலில், அல்சூர் ஏரிக்கரையில் உன்னதமான இட அமைப்பில் உள்ளது. மிக அதிகம் பேசப் பட்ட வள்ளுவர் சிலையாக, காத்து வாங்கிக் கொண்டு இருக்கின்றார்.


ஞாயிறு என்பதால், சங்கமும் காற்று வாங்கிக் கொண்டிருந்தது. நான்கு மாடி கட்டிடமாக, தோரண வலைவுகளுடன் நான் தான் என்று உயர்ந்து நின்றகின்றது. நான் உள்ளே போன பொழுது, வென்கல‌ வள்ளுவர் சிலை ஒன்றுடன், வாசன் வரைந்த 8 ஓவியங்களும் மட்டுமே இருந்தார்கள். இர‌ண்டாவ‌து மாடியில் நூல‌க‌ம். புத்த‌க‌ங்க‌ளை க‌ணினிக்கு மாற்றும் ப‌ணி ந‌ட‌ப்ப‌தால், நூல‌க‌ நேர‌ங‌க‌ள் நிலைய‌க‌ இல்லை.


புத்தகங்கள், செம்மொழி என எதிர்பார்ப்புடன் போன எனக்கு, கொஞ்சம் ஏமாற்றம் தான். 500 ரூ சந்தா தொகை, 3 புத்தகங்களுக்கு. செய்யாறில் 3, சென்னையில் 2 என லைப்ரரி கார்ட் வைத்திருக்கும் எனக்கு, இந்த 500 ரூ, கொஞ்சம் அதிகமாகவே பட்டது. மீண்டும் எப்பொழுது வரலாம் என கேட்ட பொழுது எனக்கு சரியான தகவல் கிடைக்க வில்லை. இன்டர்னேட், குறுஞ்செய்தி என தகவல் சொல்ல பல வழிகள் இருக்கின்ற பொழுதும், நேரில் வந்தாலும் தகவல் கிடைக்காதது..சங்கம் இன்னும் பல தளங்களை கடக்கவேண்டி உள்ளது.

வான் புகழ் வள்ளுவனும் எழுதாணியில் இருந்து, கீபோர்ட்கு தாவி விட்ட காலத்தில், பெங்களூர் தமிழ் சங்கம் இன்னமும் பனை ஓலை தேடிக் கொண்டிருகின்றது.

2 comments:

  1. காலம் மாறலாம், காட்சிகள் மாறலாம், கட்டணம் மாறக்கூடாதா?? என்ன கொடுமை சார் இது?

    ReplyDelete
  2. நீங்க பெங்களூரா?

    ReplyDelete