Monday, November 21, 2011

என் விபத்தின் அனாட்டமி.

இன்று காலையில் எனக்கு பைக்கில் ஆக்சிடண்ட். மையிரழையில் உயிர் தப்பினேன்.

வாரந்திர தேடலில் முக்கியமான ஒன்று கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் கசின் வீட்டுக்கு பைக்கில் செல்வது.
இந்த வாரமும் வழக்கம் போல கிளம்பினேன். ரெட் லைனில் பெட்ரோல் குறியீடு,30% மட்டுமே உள்ள பிரேக்.(அதன் மீது ஏறி நிற்க வேண்டும் வண்டியை நிருத்த).

வெள்ளை மனசு(வெம):இன்னகி ப்ரேக் சரி பண்ணிட்டு கிளம்புவோம்.
கருப்பு மனசு(கம): அட நீதான் சர்வீஸ்க்கு விட போரல, அப்ப சரி பண்ணிக்க, ஏன் வீன் செலவு.

வெ.ம: பெட்ரோல் கம்மியா இருக்கும் போல. போக‍ வர 80 கி.மி ஒழுங்க ஃபில் பண்ணிட்டு போலாம்.
க.ம: நீ சர்வீசுக்கு விட போற, பெட்ரோல் திருடிடுவாஙக. போய்ட்டு வந்து பொட்டுக்கோ.

இந்த மனப் போராத்தில் கிரேட்டர் நொய்டா சென்றேன்.
சர்வீஸ் சென்டரில் "சார் நாளைக்குதான் வண்டி கிடைக்கும். நிறைய வண்டிங்க இருக்கு."
"ஐயோ, காலைல ஆஃபிஸ் போகனுமே. சரி அடுத்தவாரம் சர்வீஸ்க்கு பார்த்துகரேன்"
"ஈவிங்கே வீட்டுக்கு கிளப்பிடுரேன் சிஸ்டர்?"

"இல்லடா காலைல போ. சண்டே நைட், எக்ஸ்பிரஸ்வேல தண்ணி அடிச்சிட்டு ராஷ் டிரைவிங்க இருக்கும்".

"காலைல பனி அதிகமா இருக்குமே"
"ஈவிங்க்கும் அதே அளவுக்கு பனி இருக்கும். நீ காலைலயே போ"

இன்று காலை ஏழு மணிக்கு கிளம்பினேன். IBM ஜர்க்கின், ஒன் ஹேண்ட் கிளவ் கிளம்பினேன். வெளியே எங்கும் எங்கும் பனி. கண்ணை முட்டும் பனி. கை நீட்டினால் விரல் நுனி கூட காணமுடியாத அளவுக்கு எங்கும், வழி எங்கும் பனி. 22 கி.மீ தூரம் அடர் பனி. முன்னால் போகும் எதிர் வண்டியின் கண்சிமிட்டும் ஆரஞ்சு கண்கள்(இன்டிகேட்டர்) மட்டும் இல்லையெனில் பல இடங்ககளில் மோதி இருப்பேன். ஆங்கில‌ ப‌ட‌ங்க‌ளில் கூட அப்படி ஒரு டிரைவிங்கை பார்த்த‌து இல்லை.

ஒத்தை க‌ண் சிமிட்டல் என்றால்‍, அது பைக். ரெட்டை க‌ண் சிமிட்ட‌ல் என்றால் அது கார். குத்து ம‌திப்பாவே ஓட்ட வேண்டிய நிலை. மூன்று லேன்க‌ள் எக்ஸ்பிர்ஸ் வேயில். கொசு மாதிரி வ‌ண்டிய(splender +) வ‌ச்சிக்கிடு எங்க‌ இருந்து ஃபாஸ்ட் டிராக்ல‌ போரது. பொருமையா பொருப்பா 40 கி.மி ஸ்பீட் ல‌ லேஃப்ட் லேன்ல‌ய‌ வ‌ண்டி போய்கிட்டு இருக்கு. ஒரு 10 கி.மீ போய் இருப்பேன். "கிரீரீ.....ச்" suddenன, கொஞ்ச‌ தூர‌த்துல‌ ஒரு பிரேக் கிரீராச் ச‌த்த‌ம். ஒரு க‌ண்டெய்ன‌ர் பிர‌க் ட‌வுன் ஆகி, லெஃப்ட் லேன்ல‌ நிக்குது. "க‌ரும‌ம் புடிச்ச‌வ‌னுங்க‌, ஒரு இன்டிகேட்ட‌ரையும் வைக்க‌ காணும். முன்னாடி போன‌ பைக் ரொம்ப ப‌க்க‌த்துல‌ வ‌ந்த‌ பிற‌கு, க‌வ‌னிச்சி போட்ட‌து தான் அந்த‌ பிரேக் ச‌த்த‌ம். நான் அப்பிடியும் இப்ப‌டியும் வ‌ண்டிய‌ அட்டி ரைட் எடுத்து முட்டாம த‌ப்பிச்சேன்.

க‌டைசிய‌, ப‌னி வில‌கின பகுதிக்கு வ‌ந்தாச்சி. பெட்ரேல் இண்டிகேட்ட‌ர் 'E' தொட்டு கீழ‌ போய்கிட்டு இருக்கு. இன்னும் 12 கிமீ தூர‌ம் போக‌னும். 8 கிமீ க‌ட‌ந்தாச்சி. ய‌முனைய‌ க‌ட‌ந்து, க‌றையோர‌மா போன‌ வீடு. மெய்ண்ரோடு ப‌க்க‌ம் போன‌ பெட்ரோல் ப‌ங்க். மெய்ன் ரோடா? ஷாட் கட்டா? ய‌முனை பால‌ம் ஃபுள்ளா ம‌ன‌ப் போராட்ட‌ம். பெட்ரோல் வேற‌ 'E'க்கும் கீழ‌ த‌வ்விக்கிட்டு இருக்கு.

லெஃப்டா, ரைட்டா? லெஃப்டா, ரைட்டா? லெஃப்டா‍‍ ரைட்டா?

ச‌ரி லெஃப்ட். த‌ள்ளிட்டு பொற‌ ரிஸ்க்க‌ மினிமைஸ் ப‌ண்ணுவோம். வ‌ண்டி லெஃப்ட் திருப்பி மெயி ரேட்டில் வ‌ந்து கொண்டிருக்கிற‌து. முத‌ல் ரெட் சிக்க‌னல் பொருமைய‌ நிக்குறேன். அடுத்த‌ சிக்க‌ன‌ல் HP பெட்ரேல் ப‌ங்க். அப்புற‌ம் தள்ற டெண்ஷ‌ன் இல்ல, ஒன்லி ஆஃபிஸ் டெண்ஷ‌ன் தான். வ‌ண்டி 40ல‌ பொய்கிட்டு இருக்கு. ஒரு ரெண்டு கால் நாய்,(ம‌னுஷ‌ன் தான்) கிராஸ் ப‌ண்றான். ச‌ரி போக‌ட்டும்னு வ‌ண்டி 30அ தொடுது. போய்ட்டானு பார்தா, நாதாரி ந‌டு ரோட்டுல‌ நின்னுகிட்டு டேண்ஸ் ஆடுது, லெஃப்டும் போகாம‌ ரைட்டும் போக‌ம‌. 30% பிரேக்க‌ புடிச்சா புடிக்கல... ஏறி பிரேக் மேல‌ நிக்க‌ரேன். அப்ப‌டியும் நாய் ந‌க‌ர‌ல. "டமா....ல்". மோதிட்டேன். வ‌ண்டி லெஃப்ட் சைட் சாஞ்சி, கால் முட்டி ஃபர்ஸ்ட் த‌ரையில‌ மோதுது. கால் சிக்கிடுச்சி. கை தேயிது. ஹெல்மெட் தரையில முட்டுது. நா விழுந்த‌ வேக‌த்துல‌ பின்னாடி வர‌ பை நிலை த‌டுமாறுது விழுந்து கிட‌க்குற‌ என்ன‌ இடிக்காம‌ த‌டுக்க‌ லெஃப்ட் திருப்ப‌ரான். முழுசா திருப்ப‌ முடிய‌ல‌. பின்னாடி வ‌ந்த‌ பைக்கோட‌ ப‌ம்ப‌ர் வ‌ந்து க‌ரெட்டா ஹெல்மெட்ட‌ ந‌ச்சுனு இடிக்குது. இடிச்சி த‌ள்ளாடிக்கிட்டு விழாம‌ க‌ட‌ந்து போது பின் பைக். ஹெல்மெட்ட் இல்ல‌னா கோமாக்கு போயிருப்பேன்.

என் கால் முட்டி டைர‌க்க‌டா த‌ரைல‌ இடிச்சி, ந‌க‌ர‌முடிய‌ல‌, வ‌ண்டி ஃபுள் வெய்ட்டும் என்மேல‌ இருக்கு. நான் இடிச்ச‌ நாய்க்கு எந்த‌ அடியும் இல்ல‌. அது எழுந்து வ‌ண்டிய‌ கூட‌ தூக்காம ரோட்ட‌ கிராஸ் ப‌ண்ணிட்டு ஓடிடுச்சி. முழுசா 30 செக‌ண்ட் த‌ரையில‌, ந‌டு ரோட்ல‌, தார் ரோட்ல‌ விழுந்து கிட‌க்கேன். என்னால‌ எழ கூட முடிய‌ல‌. பெய்ன் கொள்ளுது. வ‌ண்டி வேற‌ என் மேல. க‌டைசியா கூட்ட‌ம் கூடி வ‌ண்டிய‌ தூக்கி நிறுத்தி, என்ன‌ தூக்கி விட்டு, டிவைட‌ர் மேல‌ உட்கார‌ வ‌ச்சி தேச்சி விட‌ராங்க‌. வ‌லி கொள்ளுது. கால் ஒட‌ஞ்சிடுச்சானு ம‌ன‌சு துடிக்குது. அம்மாடி ம‌ரண‌ அவ‌ஸ்தை. 15 நிமிஷ‌ம் கொஞ்ச‌ம் கூட‌ கால‌ அசைக்க‌ முடிய‌ல‌. தேய்ச்சி, தேய்ச்சி விட‌ராங்க‌. என்னால‌ நம்ப‌வே முடியல‌ நட‌க்க‌ர‌து எல்லாம். தூக்கி விட்ட‌ ஆள் ஒருத்த‌ர் 'மூவ்' வ‌ச்சிருந்தார் போல‌(மார்னிங் வாக்) ந‌ல்ல‌ சூடு ப‌ர‌க்க‌ தேச்சி விட்ட‌ராங்க‌. கை, கணு கால், கால் முட்டி எல்ல‌ இட‌த்துல‌ சிறாய்ப்பு. ர‌த்த‌ம் க‌சியுது. IBM ஜர்க்கின் இல்லனா இன்னும் நல்ல தேய்ச்சிக்கிட்டு ரத்தம் கொட்டி இருக்கும்.

எல்லாறும் ஹிந்தியில‌ கேக்குராங்க‌. என‌க்கு புரியாத‌ ஹிந்தில‌ நானும் பேசுரேன்.

"வீட்டுல‌ யார் இருக்கா, ஃபோன் ப‌ன்றேன்."
"வீட்டுல‌ யாரும் இல்ல‌ நான் த‌னியா தான் இருக்கேன்."

"ஃபிர‌ண்ட்ஸ் ந‌ம்ப‌ர் சொல்லு கால் ப‌ன்றேன்"
"தில்லில‌ என‌க்கு ஃபிர‌ண்ட்ஸ் யாரும் இல்ல‌"‌


"நெய்ப‌ர்ஸ் ந‌ம்ம‌ர்?"
"யாரையும் என‌க்கு தெரியாது" யாரும் இல்லாமல், அனாதை போல் விழுந்து கிடந்த நொடிகள் வாழ்நாள் முழுவதும் மறக்காது.

கூட்டத்தால் ஒன்றும் உத‌வ‌ முடியாமல், தமது தினசரி வாழ்கையை எதிர்கொள்ள நக‌ர்கிறார்க‌ள். உத‌வி செய்ர‌வ‌ங்க‌ இருந்தாலும், உத‌விய‌ பெற‌ என்னால‌ முடிய‌ல‌. க‌டைசியா உட‌ஞ்சிபோன‌ க‌ண்ணாடிய‌ எடுத்து வ‌ச்சிகிட்டு, பெட்ரோல் போட்டுகிட்டு வ‌ந்து சேர்ந்தேன்.
டி.டி ஊசி போட்டு, மூனு நாள்க்கு டாக்க‌ர் ம‌ருந்து கொடுத்து இருக்காரு.

இது யாரால‌ ந‌ட‌ந்த‌து? இந்த‌ விப‌த்த‌ த‌டுத்து இருக்க‌ முடியாதா? ம‌ண்டைகுள்ள‌ கேள்வி குத்திகிட்டே இருக்கு.

1. ப‌தின‌ஞ்சினால‌ 30% பிரேக்ல‌ வ‌ண்டி ஓட்டினது த‌ப்பு. பிரேக் ஒழுங்க‌ இருந்திருந்தா ஒரு மைக்ரோ செக‌ண்ட்டாவ‌து மிச்ச‌ம் புடிச்சி, நான் மோத‌மா த‌விர்த்து இருப்பேன்.

2.போய்வ‌ர‌ தூர‌த்த‌ மெஷ‌ர் ப‌ண்ணாம‌, பெட்ரோல் அப்புற‌ம் போட்டுக‌லாம்னு அல‌ட்சிய‌மா, தெனாவ‌ட்ட‌ இருந்த‌து.

சோ, இந்த‌ விப‌த்துக்கு நானே தார்மிக‌ப் பொருப்பேற்கிறேன்.

பி.கு: பிரேக் டைட் ப‌ண்ணிட்டேன். மெக்கானிக் "காசு வேன‌ சார் இதுக்குலாம்"னு சொல்லி அனுப்பிட்டான். இத‌ நான் முன்னாடியே ப‌ண்ணி இருந்தா?

-karthiguy

5 comments:

 1. well try.. கறுப்பு எழுத்துக்கள், வெள்ளை பேக் டிராப் மாற்றவும்.

  ReplyDelete
 2. டைட்டில்ல ஒரு சின்ன திருத்தம் . - ஒரு விபத்தின் அனாட்டமி

  ReplyDelete
 3. எங்கேயும் எப்போதும்...

  ReplyDelete
 4. Day..yenda unakku ithellam. Yaar seitha punniyamo unakku serious problem illa.

  Never rush for monday morning work, records show more mistakes are committed during that time. Its about time you stop doing all "nonsense and unnecessary" frequent visits to your "cousin". Your lifestyle sounds horrible to me, you have no respect for your health. You should prioritize your tasks and eliminate similar accidents in the future. I once faced an accident, and I do not want to experience that again!!

  ReplyDelete