Sunday, October 30, 2011

க‌ண்ணாமூச்சி - ‘சவால் சிறுகதை-2011’

அனைத்து கட்ட சோதனைக்குப் பின்பு தயார் நிலையைலில், கூடங்குளம் அணு திட்டக்குழு. 108 பேரின் உண்ணாவிரதப் போராட்டம் மத்திய மாநில அரசுகளையும் அசைக்க‌ செய்திருக்கிறது. கூடங்குளம் பிரச்சைனையில் மறைமுக கண்கானிப்பில் உளவுத்துறையும். டிவிட்டர், பத்திரிக்கை, டிவி என பிரச்சனை பூதாகரமானதால் மக்கள் முன், கூடங்குளம் அணு பாதுகாப்பு செயல்முறையை விளக்க வேண்டிய கட்டாயம். விசாரனை கமிஷன் அமைத்து, மக்கள் முன், கூடங்குளம் அணு உளை பாதுகாப்பானதே என நிருபிக்க நிபுனர்கள் குழுவுடன் கூடிஇருக்கிறார்கள். மக்களை திசை திருப்ப, சமாதானப் படுத்த, 1300 கோடியை கிடப்பில் போடமல் இருக்க, கண்கொத்தி பாம்பாய் பார்த்து கொண்டிருக்கும் ரஷ்யாவை சமாளிக்க இந்த டெமோ ஏற்பாடு.

அணு உளையை போலவே ஒரு டம்மி ரிப்லிகா செய்து, செயல் திறனை விளக்கி, இது மிகவும் பாதுகாப்பனது என்று ரிப்போட் ஏற்கனவே தயார் நிலையில். எல்லாமே அரசாங்கத்தின் க‌ண் துடைப்பு. உட்டாலங்கடி. இது தெரியாம‌ல் எல்லா ப‌த்திரிகைக‌ளும், ச‌முக‌ ஆர்வள‌ர்க‌ளும், அணு எதிர்ப்பு போராட்ட‌க் குழுவும், உண்ணாவிர‌த‌ம் இருந்த‌ 108 பேரும் குருட்டு ந‌ம்பிக்கையில் கூடி இருக்கின்ற‌ன‌ர்.

ப‌ல‌ முறை ப‌ரிசோதித்து 200 ச‌த‌விகித‌ம் உறுதிசெய்யப்ப‌ட்ட‌ டெமோ குழு த‌லைவ‌ர் கோகுல் கூட்ட‌த்தின‌ர் முன் டேமோ க‌ருவியை இய‌க்கும் பாஸ்வேர்ட் அட்டை பிரிக்கின்றார். அவ‌ர் முக‌த்திலும் ப‌த‌ட்ட‌ம் இல்லாத‌ ப‌த‌ட்ட‌ம். ஸ்கேர‌ச் கார்டில் உள்ள‌ பாஸ்வேர்டை சுரண்டி க‌ணிப்பொறியில் சொல்லிக்க்கொண்டே ப‌திக்கின்றார், "S W H2.."

***

'பாத்ஃபைண்ட‌ர்' டிடெக்டிவ் GM karthik மிக‌வும் டெண்ஷ‌னாய், த‌ன‌து ஐபோனில் ஒரே ந‌ம்ப‌ரை எட்டாவ‌து முறையாக‌ ட‌ய‌ல் செய்துகொண்டிருக்கின்றார். கண்ணுக்கு தெரியாத மாயவலையில் முத்தெடுப்ப‌தில் பாத்ஃபைண்டர் INS Kursura. "இந்த‌ விஷ்ணு ம‌ட‌ய‌னை அனுப்ஜது த‌ப்பா போச்சே. உளவுதுறையின் ர‌கசிய ப்ராஜட் இது. எவ்வளவு கஷ்டப் பட்டேன் இந்த ப்ராஜட் வாங்க, இந்த நிலைக்கு வர, ஒரே நாள்ல எல்லாதையும் ஊத்தி மூடிடுவான் போல இருக்கே. லைன்ல வந்து தொலையேன்டா". 8 வருட நெருக்கம இந்த 'டா'. உள் பொல‌ம்பல், வெளி மொன‌மொன‌ப்பாய்.



டெமோ ப்ராஜட்டின் எல்லா டெமோ ரிப்போர்ட்டும் ஒரு காப்பி ஆர்கேவ் பண்ணி உளவுத்துறைக்கு ரிப்போர்ட் கொடுக்கனும். கண்ணுக்கு தெரியாத மாயவலையில் முத்தெடுப்ப‌தில் பாத்ஃபைண்டர் INS Kursura.

வழக்கமா ஸ்கேர‌ச் பாஸ்வேட் லிஸ்டை ஃபேக்ஸில் அனுப்பி வைப்பது நடைமுறை. இன்றும் வழப்படி ஒன்று வந்தது. அடுத்த சில நிமிடங்களிலே இன்னொரு ஃபேக்ஸ், சந்தேகத்தையும், படபடப்பையும் கிளரிவிட்டுவிட்டது. "இவன லைன்ல புடிகரதுக்குள்ள செவ்வாய்கே நாலு டைப் போய் வந்துடலாம் போல இருக்கே". ச‌லிப்பின் உச்ச‌க‌ட்ட‌த்தில் கார்திக்.

கட்டகடைசியாக விஷ்ணு லைனில்,

"டேய் என்ன ஆச்சிட உனக்கு. என்ன கொழப்பாம் அங்க, எதுக்கு ரெண்டு ஃபேக்ஸ் அனுப்பி இருக்க"

"ஏன் டென்ஷன் ஆகுரிங்க, இங்க டெமோ எல்லாம் நல்லபடியா தான் போய்கிட்டு இருக்கு, கோகுல் இப்பாதான் பாஸ்வேர்ட்டை S W H2னு டெமோ மிஷன்ல எண்டர் பண்ணிகிட்டு இருக்காரு,"

"பின்ன எதுக்கு தவறன பாஸ்வேர்ட் அனுப்பி இருக்கேன்னு இன்னொரு ஃபேக்ஸ் அனுப்பியிருக்க‌?"

"என்னது ரெண்டாவது ஃபேக்ஸா?? என்ன உள‌ர்ரீங்க, நான் ஒன்னும் அணுபலயே"

"நீ அனுப்பளய, அப்பா வேற யார் அனுப்பினது."


எதிர் சுவற்றில் மாட்டி இருந்த கலெண்டரில் கால் நீட்டி, கண் மூடி கேட்டுக்கொண்டிருந்தார், பாம்பு குஷனில் பள்ளிகொண்ட விஷ்ணு.


-‍‍லௌ ஆல்...கார்'தீ'க்,
செய்யாறு.
karthiguy@gmail.com
09999649209

2 comments:

  1. @karthiguy சின்னஞ்சிறிய கதையா இருக்கு.. மினிம்ம் 500 வார்த்தைனு rulesla படிச்சேன்.. nice concept..

    ReplyDelete
  2. நல்ல கதை. சமுக பார்வை.

    ReplyDelete