Tuesday, September 27, 2011

'பிறகு'‍‍‍ -பூமணி.

'பிறகு'-பூமணி.

எஸ்.ரா வின் தமிழில் சிறந்த 100 புத்தகப் பட்டியலை தேடி பிடித்து ப‌டித்து கொண்டிருக்கின்றேன். எழுத்தாள‌ர்க‌ளின் த‌னி புத்த‌க‌ங்க‌ளை முத‌லில் முடிக்க‌ திட்ட‌ம்.

'பிற‌கு' படிக்க தொடங்கிய போது, சில அந்த காலத்து வார்தைகளை புடிபடாமல் இருந்தது. உள்ளே போக போக மிக இயல்பாக தொத்திக்கொண்டது. கோவில்படிக்கு அருக்கில் உள்ள ஒரு கிராம், கரண்ட் வராத கால கட்டம். சுதந்திரம் பெறாத வாழ்கை முறை. இதில் ஒரு செருப்பு தைக்கும் தொழிலளியின் வாழ்கையை, அவன் படும் பாடுகளை, சமுகம் சார்ந்த சூழ்நிலையை கண் முன்னே படமாக விரிகின்றது. மனசுக்குள் தோட்டாதரணி வந்து செட் போட்டது போன்ற மனக் காட்சிகள். அழகிரியாக வரும் செருப்பு தைக்கும் தொழிலாளி வாச‌க‌னின் க‌ண்ணெதிரே ந‌ட‌க்கின்ற‌து. இர‌ண்டு த‌லைமுறைக‌ளை தாண்டி அவ‌ன் வாழ்கை நீளுகின்ற‌து.

என்னை க‌ல‌ங்க‌ வைத்த‌ ஒரு ப‌குதி.. அழ‌கிரியின் ம‌க‌ள் ஒருவ‌னுக்கு வாக்க‌ப் ப‌டுகிறாள். ஒரு ஆண் குழ‌ந்தை பிற‌ந்த‌ பிற‌கு, க‌ண‌வ‌ன் அவ‌ளைப் பிடிக்காமல், குழந்தையை பிடித்துக் வைத்துக் கொண்டு அடித்து துர‌த்தி விடுகின்றான். அப்பாவிடம் வ‌ந்த‌வ‌ளை மீண்டும் வேறு ஒரு கல்யாண‌ம். இப்பொழுது பெண் குழ‌ந்தை பிற‌க்கின்றது. இந்த‌ இர‌ண்டு குழ‌ந்தைக‌ளையும் ப‌ராம‌ரிக்க‌ அவ‌ள் ப‌டும் பாடு... மென்சோக‌‌க் க‌விதை.


வ‌டிவேலு காமெடி ஒன்னு, ஓட்டு போட்டுடு வ‌ர‌வ‌ங்க‌ கிட்ட 'யாருக்கு ஓட்டு போட்டே'னு கேப்பாறே, அந்த‌ டிர‌க் இந்த‌ புக்க‌ல் இருந்துதான் சுட்ட‌து.

நள்ளிரவு ஒரு மணிக்கு படிச்சிமுடிச்சேன். அப்புறம் தூக்கம் புடிக்க ஒன் அவர் ஆச்சி. வளரும் பதிவர்கள், கட்டாயம் தேடிப் பிடித்து படித்துவிடுங்கள்.

அதிகம் எழுதிய பழக்கம் இல்லாததால், முழுசா சொல்ல முடியல, நீங்க படிச்சிட்டு ஒரு பதிவு 'பிறகு' போடுங்க.

1 comment: